சிறுவாணி ஒரு கேடா..??

சிறுவாணி பிரச்சனையில் தாம் தூம் என மக்கள் குதிக்கும் நிலையில் நம் மனசாட்சி " காவிரியையும், நொய்யலயும், காளிங்கராயனையும், பவானி மற்றும் அமராவதியையும் எந்த நிலையில் வைத்துள்ளீர்கள்?? உங்களுக்கு சிறுவாணி ஒரு கேடா" என்று மனசாட்சி காரி துப்புவதை எந்த துணியை கொண்டு துடைப்பது...????

தனிமனிதர்கள் நாம் வெளியூர்க்காரனிடம் இருந்து நீருக்கு போராடும் நாம் உள்ளூர் நீர் ஆதாரங்களை எந்த அளவு பாதுகாக்கிறோம்..?? எத்தனை வீடுகளில் மழைநீர் சேகரிப்பை இப்பவும் செய்கிறோம்?? எத்தனை ஏரி, குளங்களை ரியல்எஸ்டேட் ராட்சசர்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளோம்..?? எத்தனை பேர் சாயக்கழிவு பிரச்சனைக்காக மனுவாவது கொடுத்தோம்..?? மணல கொள்ளைக்கு எதிராக ஒரு கடிதமாவது எழுதிநோமா..??

நமது மௌனத்தை பலர் காசாக்கி, சோற்றில் விஷத்தையும், நம் வீடு பெண்களின் கர்ப்பத்தில் ஆசிட்டையும் அடித்து கொண்டிருக்கிறார்கள்.சராசரியாக ஒவ்வொரு சாய/தோல் ஆலையும் குறைந்த பட்சம் 10 பேரையாவது மலடாக்குகிறது. அதில்லாமல் அணைத்து வகை உடல் நலகொலாரும் போனஸ்..!

 
நீர் பிரச்சனைகளுக்கு போராடும் தலைவர்கள் பெரும்பாலும் அதை அரசியல் ஆக்கி கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையில் நீர் ஆதார அக்கறை உள்ளவர்கள் என்றால் வெளி மாநிலங்களிடம் போராடும் அதே அளவு கோபத்தை உள்ளூர் பணபிசாசுகளிடமும் காட்டலாம்..!
  

குடிநீருக்காக திறக்கப்படும் வெறும் 100 கன அடி நீரிலும் இரக்கமே இல்லாமல் சாய விசத்தை கலக்கிறார்கள்.. இப்படியும் சந்ததிக்கு சொத்து சேர்க்க வேண்டுமா...?? இந்த சாய கழிவு புகாரை அளித்தால், அடுத்த நாளே குண்டர்கள் போன் செய்து மிரட்டுகிரார்கலாம்..! ஈரோட்டு பின் காவிரி பாயும் மாவட்டங்கள் அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.. முக்கியமாக ஈரோடு நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள்..நொய்யல்லால் கோவை, ஈரோடு, திருப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. காளிங்கராயன் ஈரோட்டை கெடுத்துள்ளது..!மொத்தத்தில் விவசாய பொருட்கள் அனைத்திலும் உர/சாயக்கழிவு/தோல் கெமிகல்/பூச்சிமருந்து விஷம் என முற்றிலும் 
மாசுபட்டுள்ளது. தாய் பாலில் இருந்து பசும்பால் வரை எதையும் விட்டு வைக்கவில்லை...!!

                                                   இணைய செய்தியாளர் : சசிகுமார்