கன்னடராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் பணம் கைமாறிய வழக்கு முத்துலெட்சுமி விடுதலை

   கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தின்போது, அவரை மீட்க கொடுக்கப்பட்ட பிணைத்தொகையை பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து 11 பேரை,  கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.
எனினும், இந்த வழக்கில்  13 பேருக்கு  ஒராண்டு சிறைத் தண்டனையும், 150 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கன்னட நடிகர்  ராஜ்குமார் கடந்த 2001 ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார். அவரை மீட்க, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் பல கோடி ரூபாய் பிணைத் தொகை கொடுத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பிணைத்தொகையாக கொடுக்கப்பட்ட பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக கூறி, வீரப்பன் மனைவி முத்து லெட்சுமி உள்ளிட்ட 23 பேர் மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்