தருமபுரி கலவர வழக்கு -- உயர்நீதிமன்றம் உத்தரவு

   தருமபுரியில் காதல் கலப்புத் திருமணத்தால் ஏற்பட்ட கலவரம் எதிரொலியாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியில் சாதி மறுப்பு காதல் திருமணம் எதிரொலியாக, ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், மற்றொரு பிரிவினரின் நான்கு கிராமங்கள் சூறையாடப்பட்டன. 268 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இதுகுறித்து செங்கொடி என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காதல் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை சுட்டிக் காட்டினார்.
வீடு மற்றும் உடைமைகளை இழந்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும்,  இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கறிஞர் செங்கொடி தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த  நீதிபதிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட்டனர்.
இணைய செய்தியாளர்  -Er.மாதேஷ்