தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் –தேசிய ஆணையம்

     ருமபுரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற வன்முறை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது  திட்டமிட்டு நடத்தப்பட்ட  தாக்குதல் என தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் காதல் கலப்புத் திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக, தாழ்த்ப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. அவர்களது சொத்துக்களும் சூறையாடப்பட்டன.
பாதிக்கப்ப்டட கிராமங்களில் தாழ்த்த்ப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் புனியா நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்கள், அவரது காலில் விழுந்து கதறி, தங்களுக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புனியா, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனபது நிரூபணமாகியுள்ளதாக கூறினார்.
இதனிடையே, இந்த விவகாரத்தை தமிழக அரசு மிகவும் மெத்தனமாக கையாள்வதாக  புகார் எழுந்துள்ளது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்ததாக காவல்துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் பலரும் தாழ்ததப்பட்டோருக்கான தேசிய ஆணையத் தலைவர் புனியாவிடம் புகார்  கூறினர்.
சூறையாடப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,  பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்பட்வில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்திலேயே கடந்த 1970களில் நக்சல் பாரிகள் உருவானது தருமபுரி மாவட்டத்தில்தான், ஜாதீய கொடுமைகளுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். ஆனால், நக்சல்பாரிகள் அடக்கி ஒடுக்கப்பட்ட பின்னர், ஜாதீய கொடுமைகள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கிவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
-பசுமை நாயகன்