தருமபுரியில் மீண்டும் சாதி மோதல் தலைதூக்கியதால் மாவட்டம் முழுவதும்
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 7ஆம்தேதி
நாயக்கன்கொட்டாய் பகுதியில் தலித் மக்களின் வீடுகள் தீ வைத்து
கொளுத்தப்பட்டன.
இச்சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் பெரியாம்பட்டி, கடத்தூர்,
அரூர், மாட்லாம்பட்டி ஆகிய இடங்களில் மீண்டும் சாதி மோதல் ஏற்படும் சூழல்
உருவானதாக கூறப்படுகிறது. மேலும் இரு தரப்பினரும் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என
போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் தருமபுரியில் பதற்றமான நிலையே
நீடிக்கிறது.
இதையடுத்து தருமபுரி ஆட்சியர் லில்லி, இன்று அதிகாலை முதல் மாவட்டம்
முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பித்தார். இதனால் இனி ஊர்வலம், மறியல்
உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவதும் கூட்டம் கூடுவதும் தடை
செய்யப்படுகிறது. சாதி பிரச்னை பற்றி பேச வெளி மாவட்டத்தைச் சேர்ந்த யாரும்
தருமபுரி மாவட்டத்திற்குள் வரவும் மாவட்ட நிர்வாகம் தடை
விதித்திருக்கிறது.
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்