தருமபுரியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்கத் காவல்துறை தவறி விட்டதாக குற்றம்சாட்டினார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்க பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகப் பிரிவு சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாகவும் மாயாவதி தெரிவித்தார். தருமபுரி விவகாரத்தில் நடப்பவற்றைப் பகுஜன் சமாஜ் கட்சி வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இணைய செய்தியாளர் -Er.மாதேஷ்